Articles by "Puttalam"




சுஐப் எம்.காசிம் -

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல் அம்பாரை மாவட்டத்தில் எட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திலிருந்துதான் இந்த இணக்க அரசியல் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை எந்தக் கட்சிகளிலிருந்தாவது இங்கு முஸ்லிம்கள் தெரிவாகச் சந்தர்ப்பம் இருந்ததால், புத்தளம் மாவட்டம் இணக்க அரசியலுக்கான மையமாகப் பார்க்கப்பட்டுள்ளதாக இம்முயற்சியை நோக்குவோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் புத்தளம் நான்காம் இடத்திலுள்ளதே, இங்கு ஒரு ஆசனத்தை இழப்பதா? என்பதுதான் இணக்க அரசியலுக்கான இந்த வித்து இங்கு விதைக்கப்பட்டதற்கான காரணம். 

முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் தெரிவான மாவட்டமிது. நிதியமைச்சர் நெய்னா மரிக்காரை ஈன்ற மண்ணிது. இங்கு ஒரு பிரதிநிதியை இழப்பது, சமூக அரசியல் அடையாளத்துக்கான தோல்வியாகவே பார்க்கப்படும். மட்டுமல்ல பிரித்தாளும் தந்திரங்களுக்குப் பலியாகும் மாவட்டமாகவும் பிறரால் இது பார்க்கப்படாலாம் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகள். முப்பது வருடங்களாக மக்களால் தெரிவாகும் எம்.பியின்றிக் கிடந்த இந்த மாவட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான பல முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலும், நகரபிதா பாயிஸ் தலைமையிலான குழு, ஒட்டகச் சின்னத்திலும் போட்டியிட்டு, சமூக அடையாளத்தை வென்றெடுக்க முயற்சித்தன. எனினும், இந்த முயற்சிகள் இரு தரப்பிற்கும் கைகூடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், சொற்ப வாக்குகளால் நவவி சமூக அடையாளத்துக்கான வாய்ப்பை இழந்தமை பெரும் வேதனை. இதனால்தான் என்ன விலை கொடுத்தும், இம்முறை முஸ்லிம் சமூக அடையாளம் வெல்லப்பட வேண்டுமென்ற சிந்தனைத் தீவிரம், எல்லோரையும் ஓரணியில் இணைத்திருக்கிறது. 

வடபுலத்தில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தையே அரவணைத்து, ஆறுதலளித்ததால் முஸ்லிம் சமூகம் தனித்த ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கு அத்திவாரமிட்ட மாவட்டத்தில், அடையாள அரசியல் இல்லாமல் செய்யப்படுவதை ஏற்க முடியாதே! இந்த எண்ணங்கள்தான் எல்லோரையும் இணைத்துள்ளது. 
புலம்பெயர்வது இஸ்லாமிய வரலாற்றுக்குப் புதிய விடயமல்ல. இறைதூதர் முஹம்மது நபியவர்கள், தனது பிறப்பிடமான மக்காவைவிட்டு மதீனாவுக்கு வந்தது முதல் இவ்வரலாறுகள் நீள்கிறது. ஆனால், வெவ்வேறு பின்னணிகள் இப்புலப்பெயர்வுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. ஒரு இனமே அடையாளம் காணப்படுவதற்கு அடிகோலிய புத்தளம் மாவட்டம் ஒன்றிணைந்துள்ளமை சாதாரண சின்னத்திலல்ல, தராசு சின்னத்தில். அரபியில் "மீசான்" எனப்படும் இச்சின்னம், முஸ்லிம்களின் மத, மறுமை உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மரணித்த பின்னர் மண்ணறையிலிருந்து எழுப்பப்படும் மறுமைநாளில், உலக வாழ்க்கையில் செய்த நன்மை, தீமைகளை அளந்து நிறுத்துப்பார்க்கவும், பட்டோலை (சொர்க்கமா, நரகமா) என்ற தீர்ப்புப் பத்திரம் வழங்கப்படுவதும் இந்த தராசின் "மீசான்" நிறுவையில்தான் என்பது முஸ்லிம்களின் மத நம்பிக்கை. புனித வேத நூலான திருக்குர்ஆனும் "அளவை, நிறுவைகளில் மோசடி செய்யாதீர்" என எச்சரிக்கும் வசனமும் இந்த "மீசானையே" ஞாபகமூட்டுகிறது. எனவே, எதிர்பார்ப்பதுபோல இந்த முயற்சியை சமூகத்தின் அமானிதமாக அடையாளப்படுத்த, "மீசான்" என்ற சொற்பிரயோகத்தை முஸ்லிம் தலைவர்கள் தாராளமாக உச்சரிப்பர். மற்றும் இச்சின்னம் முஸ்லிம் அரசியலுக்குப் புதியதுமில்லை.

1987 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தராசுச் சின்னத்தையே தெரிவு செய்திருந்தது. கட்சி அங்கீகரிக்கப்படாத அன்றைய சூழலில், சுயேச்சையாகப் போட்டியிட இக்கட்சிக்கு வேறு சின்னம் இருக்கவில்லை. இது மட்டுமா? முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட ஷேகு இஸ்ஸதீன், தனது முஸ்லிம் கட்சிக்கான சின்னமாகவும் இந்த தராசையே "மீசான்" தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, இன்றைய தேர்தலில் இந்த முயற்சியின் எடைகள் கனதியாகுமெனப் பலர் எதிர்பார்க்கின்றனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரபல அரசியல் புள்ளிகள் இவ்வணிக்குப் பலம் சேர்த்துள்ளனர். நகரபிதா பாயிஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எஹியா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தாஹிர், புத்தளம் நகர சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலிசப்ரி, ஐ.தே.க அலிகான், மக்கள் காங்கிரஸ் முஸம்மில் உள்ளிட்ட பலரின் உள்வாங்கல்கள், முஸ்லிம் சமூக அரசியல் அடையாளத்தை இம்முறை புத்தளத்தில் வென்றெடுக்கவே செய்யும். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சிகளும் தத்தமது அணிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை "தாயும் பிள்ளையானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதை உணர்த்தியுள்ளது. முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு குறுக்காகக் களமிறக்கப்பட்டுள்ள இவர்களை, இம்மூன்று கட்சிகளும் களமிறக்கக் காரணமென்ன? இதுதான் புத்தளம் மாவட்டம் எங்கும் எதிரொலிக்கும் முஸ்லிம்களின் ஆதங்கங்கள். இந்த மாவட்டத்தின் மகிமை, மகத்துவம் என்பவற்றைக் கௌரவித்துத்தான், கே.ஏ. பாயிஸை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், நவவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எம்.பியாக்கி அழகுபடுத்தின. ஆனால், இந்த அரசியல் அழகு சமூக அடையாளமாக வேண்டுமென்றே புத்தளம் மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். 

முப்பது வருடங்களுக்கு மேலாக, வெளியேற்றப்பட்ட நிலையில், இங்கு அகதியாக வாழ்ந்த முஸ்லிம்கள், பிறப்பத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணம் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இழந்துள்ளனர். இதனால் இவ்வகதிகள் புத்தளத்தில்தான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. இதற்கான அங்கீகாரமாக, அடையாளமாக புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெல்லப்பட வேண்டும். இந்த வெற்றியை வீழ்த்தும் வேட்டுக்களாக, வேறு கட்சிகளால் தராசுக்கு "மீசான்" வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்கள் வேலை செய்யக் கூடாது. இவ்வாறு செய்வது, சகோதரத்துவ மண்ணுக்கு செய்யும் சதியாகவே அளக்கப்படும். 

வடபுலத்து மக்களின் வெளியேற்றம் புத்தளத்தை எப்படிச் சகோதரத்துவப் பிணைப்பில் இணைத்ததென்பதற்கு, முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் கவிதைகள் சாட்சி. "தோப்பு வீழ்ந்து தோழமையானது" என்ற அவரது அழகிய கவிவரிகள், புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கருணையை எடுத்துக்காட்டும் அற்புதக் கவிநயம். அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் குடிசைகளில், கூடாரங்களில் குடியமர்த்துவதற்கு, கற்பிட்டிப் பிரதேசத்தில் ஓங்கி, உயர்ந்து நின்ற தென்னந்தோப்புக்களை வெட்டி, வீழ்த்தி தட்டாந்தரையில் குடிசைகள் அமைத்ததை, மர்ஹும் அஸ்வரின் கவிநயங்கள் எமது மனக்கண்கள் முன் கொண்டு வருகின்றன. அங்கிருந்த மணற்பாங்கான பிரதேசத்தில் வாழ்வியல் இருப்புக்களை அமைக்கும் பணியிலீடுபட்டிருந்தோரின் பாதங்கள் மண்ணுள் புதைந்தன. இவை வரவேற்புக்களால் வீசப்பட்ட மலர்க் குவியல்களுக்குள் நுழைந்த பாதங்கள் என்றார் மர்ஹும் அஸ்வர். 

இப்பணிகளில் மர்ஹும் அஷ்ரபின் பங்களிப்புக்களும் பெறுமதியானதால்தான், இம்மாவட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த சமூக அரசியல் அடையாளம் மீண்டும் உயிர்ப்பெற ஆரம்பித்தது. இந்த மீசானால் அளக்கப்படும் முயற்சிகள் சாத்தியமற்றுப் போக எந்தச் சந்தர்ப்பங்களும் இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் தொகுதியை வைத்தே, வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

நாங்கள் இனவாதிகளோ!, பிரதேசவாதிகளோ!, பயங்கரவாதிகளோ! அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால் பறித்தெடுக்கப்பட்ட நாம் இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமைப்பட்டவர்களே என பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய உப தலைவரும், முதலைப்பாளி வட்டார அமைப்பாளருமான தௌபீக் அவர்களின் ஏற்பாட்டில் தராசு சின்னத்தில் இலக்கம் 7ல் போட்டியிடும் ஆப்தீன் எஹியா அவர்களை ஆதரித்து நேற்று (09) முதலைப்பாளியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

30 வருடங்களாக நாம் பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்களித்தோம். ஆனால் புத்தளம் தொகுதிக்கான சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படுவதில்லை. எமது விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் தொகுதிக்கு வெளியிலுள்ள பெரும்பான்மையினரே பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். எமது விருப்பு வாக்குகளால் தெரிவானவர்கள் எமது உரிமைகளையும், அபிலாசைகளையும் பறித்தெடுப்பதிலும்,ஆக்கிரமிப்புக்களை செய்வதிலும், எமது பிராந்தியத்தில் குடியேற்றுவதிலுமே ஈடுபாடு காட்டினர்.
தற்போது எம்மிடம் எஞ்சியுள்ளது விவசாய நிலங்கள் மாத்திரமே. அனைத்து நிலங்களையும் (உப்புளக் காணிகள், அரச காணிகள், கடல் நிலங்கள்) பறித்து எமது மக்களுக்கானதைப் பறித்து சில தொழிலதிபர்களுடன் இணைந்து பங்கிட்டு இலாபம் அடைந்து கொண்டனர்.


22 ஆண்டுகள் புத்தளம் மாவட்டத்திற்கான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதிலேயே எமது அரசியலை ஆரம்பம் செய்து வெற்றி பெறாவிட்டாலும் தேசிய பட்டியல் மூலம் நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அதிகாரம் கிடைத்தது. அதனை துஷ்பிரயோகம் செய்தனர். எமது இனத்துக்காக இழந்த பாராளுமன்ற உறுப்புரிமையை வென்றெடுக்க எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களை முகம்கொடுக்க அவர்களால் முடியாமல் போனது. எவ்வித திட்டங்களும் அவர்களிடம்; இல்லை. இழந்த பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற கோசங்களை மாத்திரமே கைவசம் வைத்திருந்தனர்.

தற்போதும் அதே கோசங்களுடன் எம்மிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் எமது பிரச்சினைகளுக்கான எவ்விதமான தீர்வும் இல்லை. எமது பிரச்சினைகள் என்வென்பது குறித்த தெளிவு கூட அவர்களிடம் இருக்குமா என எண்ணத் தோன்றுகின்றது.

நாம் எமது மக்களின் பிரச்சினைகளை மக்களுடன் இருந்து இணங்கண்டுள்ளோம். பொலிஸிலும், பிரதேச செயலகங்களிலும், எமது நிலை என்னவென்பது குறித்து நான் கூறி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எமது மக்களை அவர்கள் வழிநடத்துக்கின்ற விதம் என்னவென்பது பற்றி நாங்கள் தினந்தினம் காண்கிறோம். பிரதேச செயலகங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும், என பல கிலோ மீற்றர்கள் எமது மக்கள் பிரயாணிக்க வேண்டிய நிலையே இன்றுள்ளது. எமது வாழ்வாதாரத்தை பிரயாணத்துக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எமது மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுத் திட்டங்களுடனேயே நாம் தேர்தல் களத்தில் வாக்குக் கேட்கின்றோம் எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களாக ஆஸிக், அக்மல், றிபாஸ் நஸீர், பௌஸான், முன்னால் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஷாபி, முதலைப்பாளி பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் மக்கீன், செயலாளர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஊடகப் பிரிவு)



குற்றப்புலனாய்வு பிரிவால் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர். குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரச பேருந்துகளை பயன்படுத்தி புத்தளம் பகுதி வாக்காளர்களை ஏற்றிச் சென்றமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு அமைய தம்மை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் தனது அடிப்படை உரிமைகள் மனுவினூடாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் குறிறப்புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டு தம்மை கைது செய்ய தயாராகி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதன்மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் ஆகவே வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் உச்சநீதிமன்றத்தை கேட்டுள்ளார்.

முன்னால்  மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற வேற்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்களின் சொந்த நிதியில் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இன மக்கள் வாழும்  மலர்வத்தை கிராமத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அத்தியாவசிய தேவையாக உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.


PUTTALAMMIRROR இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக எம்மால் சில நாட்கள் செய்திகளை பிரசுரிக்க முடியாமல் போனது,

மீண்டும் இன்றிலிருந்து எமது செய்திகளை  எமது WWW.PUTTALAMMIRROR.COM இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

 புத்தளம் காசீம்சிட்டி, ரத்மல்யாய போன்ற பிரதேசங்களில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு உற்பட்டிருந்த சுமார் 47 நபர்கள் இன்று பகல் இராணுவ பஸ்களில் புத்தளம் நகருக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.
கடந்த மாதத்தில் புத்தளம் காசீம் சிட்டியை சேர்ந்த தப்லீக் ஜமாத்தின் உறுப்பினர் ஒருவர் தொற்றுக்குள்ளானதை அடுத்தே மேற்படி கிராமவாசிகள் தனிமைப்படுத்தலுக்கென மின்னேரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறப்பட்ட தப்லீக் உறுப்பினர் இந்தோனேஷியாவுக்கு யாத்ரீகராக சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பகல் புத்தளம் போலீஸ் நிலையம் முன்பதாக ராணுவ பஸ்களில் வந்த இவர்களை புத்தளம் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வரவேற்று அருகில் இருக்கும் சாந்த அன்ரூஸ் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இந்த தனிமைப்பட்டவர்களின் வருகையுடன் புத்தளத்திற்கு என இருந்த கொரானா அச்சுறுத்தல்கள் நீங்கியுள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகாவும், புத்தளத்தில் தற்போதைய ஆரோக்கிய நிலையைப் பற்றியம் தமது திணைக்களம் மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறினர்.

இதே வேளை புத்தளம் நகரின் சுகாதாரப் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாகவும் எனவே மாவட்டத்தின் முடக்க நிலையை அகற்றுவதற்கென புத்தளம் மாவட்ட செயலாளர் அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை செய்துள்ளதாகவும் புத்தளம் கச்சேரியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தேச்சாரியான ஊரடங்கு மற்றும் பகுதியளவிலான, பாதுகாப்புடன் கூடிய முடக்கங்களால் புத்தளம் தொகுதி பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் பெரும்பாலான உழைக்கும் சமூகத்தினர் தமது வாழ்வாதாரத்திற்கான வழிகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சிற்கு வாக்களித்து எம்மால் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனது, நீண்ட காலமாக புத்தளம் மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கிய சிறுபான்மை கட்சிகள் இன்று வரை முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை பெற எட்டிய முயற்சிகள் எதுவுமில்லை,

ஆனால் மிக குறுகிய காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு அதாவது கடந்த பொதுத்தேர்தலில் முதல்தடவையாக களமிறங்கி சொட்ப  வாக்குகளால் தோல்வியுற்ற போதிலும் கட்சியின் செயலாளரை இழந்து ,இன்று வரை வழக்கு பேசிக்கொண்டிருக்கின்றார், அதே நேரம்  மன்னார் மாவட்ட பொதுஜன பெரமுனாவின் அமைப்பாளராக அண்மையில் பதவிபெற்று உங்களுக்கெதிராக எஹியா பாய் செயற்படுகிறார். இவர்களை எதிர்த்து புத்தளம் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியலை தந்து கௌரவ படுத்தியுள்ளீர்கள்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு , தற்போதைய நகர சபை தலைவர் பாயிஸ் அவர்களின் பிரதேச வாத கருத்துக்களால் ,துரோகத்தனத்தால் மக்கள் பிழையாக வழிநடத்த பட்டதே உண்மை, எனினும் இதய சுத்தியுடன் நீங்கள் புத்தளம் மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதியை வென்றெடுக்க ஆய்வுகளை மேற்கொண்டு தனித்து களமிறங்கினால் மாத்திரமே வெற்றியடைய முடியும் என்ற முடிவில் உங்கள் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ,பிராந்திய அமைப்பாளர்கள் மூலம் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ,சுதந்திர கட்சி  புத்தளம் தொகுதி உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்களுடன் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடாத்தினீர்கள்.

புத்தளம் மாவட்ட மக்களுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுத்தருவதற்காக சுமார் இரண்டரை வருடங்கள் கஷ்ட்டப்பட்டீர்கள் , உங்களின் தியாகங்களை புத்தளம் மக்கள் நாம் உணர்ந்துள்ளோம்.

இதுவரை எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாது இருந்து விட்டு புத்தளம் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் மொட்டுடன் சங்கமிக்க ஆளுநர் முஸாமில் அவர்களுடனும் ,பசில் ராஜபக்ஷ உடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ,பேச்சுவார்த்தை சரிவராத பட்சத்தில் வழியில்லாமல் மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையிடம் மண்டியிட்டுள்ள துரோகத்தனத்தை மக்கள் மறக்கவில்லை.அதே நேரம் கட்சியின் போராளிகளும் மறக்கவில்லை.
அதே நேரம் ஏற்று மீண்டும் மொட்டுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் அக்கட்சியின் முன்னால் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் யானையுடன் சங்கமிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றார். இவ்வாறு ஸ்த்தீரம் இல்லாத நிலையில் , யார் வேண்டுமானாலும் எமது சின்னத்தில் போட்டியிடலாம் என முஸ்லீம் காங்கிரஸ்  கட்சியின் தலைமை விடுத்துள்ள அறிக்கையானது அந்த தலைமைத்துவத்தின் பண்புகைளை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதாய் அடையாளப்படுத்துகின்றது.

எனவே புத்தளம் மாவட்ட மக்கள் உங்களின் இதய சுத்தியுடனான செயற்பாட்டை வரவேற்கின்றோம். நீங்கள் உங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதோடு , தயவு செய்து உங்களின் முயற்சிகளில் பின்நிற்க வேண்டுமெனவும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இதற்கு முஸ்லீம் காங்கிரசின் போராளிகளும் ஆதரவு வழங்கும் மனப்பான்மையுடன் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டுவதுடன், மயில் சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வேண்டுகோள் விடுகின்றோம். என அவர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(புத்தளம் மாவட்ட சிவில் சமூக அமைப்பு)

புத்தளம்-ஆண்டிமுனைத் தமிழ் மகா வித்தியாலயத்தின் வைர விழா(12) அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  ஜுனூத் காசிம் அவர்கள் பிரதேசத்தில் சிறந்த ஊடகவியலாளருக்கான  பொன்னாடைப் அணிவித்து  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஒன்றினைந்து அமைத்துள்ள கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், தேசிய தவிசாளராக மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பொது செயலாளராக பெஸீல் ராஜபக்ஷ அவர்களும் சற்று முன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

30 வருடம் பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கும் புத்தளம் தொகுதி தொடர்ந்தேச்சியாக பெரும்பான்மை கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து,  தன் இறுப்புக்கான இறுதி போராட்டம் என சில கல்விமான்கள் கூறுமளவு முக்கியமான தேர்தலாக 2020 பொதுத்தேர்தல் அமைந்துள்ளது.

இந்த நிலையையில் கூட்டணியை அமைப்பதற்காக முன்னின்ற முன்னால் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான நியாஸ் அவர்கள், தற்போது கூட்டணியை விட்டு யானையில் பயணிப்பது தொடர்பாக பேசுவதாகவும்,  கட்சியின் தலைவரின் தலைமையில் புத்தளம் மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள் கூடிய சந்தர்ப்பத்தில் அவர் கூட்டணியில் உள்ளவர்கள் வென்று பெசில் ராஜபக்ஷவுடன் இணைந்து விடுவார்கள் என்ற கருத்தையும் கூறி இருந்ததுடன், தங்களின் ஆதரவாளர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அவர் யானையுடன் பயணிப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாகவும், அவர்களின் விருப்பை கேட்டறிந்ததாகவும்,  முஸ்லிம்காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பெரும்பான்மை கட்சிக்கு வாக்களித்து தெளிவான நிலையில் மக்கள் கூட்டணியை வரவேற்கும் சந்தர்ப்பத்தில் எதற்காக நியாஸ் மாற்றமாக நடக்கிறார் என்ற வினா கடந்த காலங்களில் ரங்கே பண்டார பா.உறுப்பினருக்கு வேலை செய்ததாகவும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பலமிழக்க செய்ததாகவும், பல தரப்பட்ட சர்ச்சைக்குறிய குற்றச்சாட்டுக்களை அவர் சுமந்துள்ள நிலையில் தெளிவான விளக்கத்தை நாம் வினவிய போது, இன்னும் உறுதியான நிலைப்பாடு இல்லையென்றும் உறுதியான தீர்மானத்தின் பின் விளக்கமளிப்பதாகவும் அவர்  புத்தளம்மிரருக்கு தெரிவித்தார்.



புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று  (13) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது






.


ஸ்லாஹிய பெண்கள் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (13) கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் மௌலவி முனீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்கள் கலந்துகொண்டதுடன்,  கௌரவ அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி, நகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். ரஸ்மி மற்றும் உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கல்பிட்டியில் போட்டியிடடும் சர்பராஸ் தனக்கான ஆதரவைக்கோறி வெளியிட்டுள்ள அறிக்கை!


எதிர் வரும் 2020.02.22 (சனிக்கிழமை)ஆம் திகதி நடைபெற உள்ள  இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கற்பிட்டி பிரதேச செயலகம் சார்பாக s.sarfaras ஆகிய நான் போட்டியிடுகிறேன் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே இது தொடர்பில் தங்களது ஆதரவை தந்து வெற்றிக்கு பங்களிக்குமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.https://vote.nysc.lk/#/இந்த லிங்கினூடாக 18 தொடக்கம் 29 வயது உடையவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியும். பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் 0725854765 இந்த இலக்கதிற்கு தொடர்புகொள்ளவும்.

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று 12)    கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில்
நடைபெற்றது.

இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் பாயிஸ், உயர்பீட உறுப்பினர்களான நியாஸ்,பைரூஸ்,ஜெவ்பர் மரிக்கார் உட்பட பலர்ர் கலந்துகொண்டனர்.


சஜித் கூட்டணியோடு பயணிக்க முன்னால் மாகாண சபை உறுப்பினர் கருத்து வெளியிட்ட போதும் சமூகத்திற்காக கூட்டணியோடு ஒன்று பட்டு போக வேண்டும் என கலந்து கொண்ட அக்கரைப்பற்று ஒன்றியம் மற்றும் முக்கியஷ்தர்கள்  ஆலோசனை கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன் போது கூட்டணியோடு அல்லது தனியாக பயணிப்பெதென்றும்,பெரும்பான்மை கட்சியில் பயணிப்பதில்லை என்ற நிலைப்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ம்மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மலேசியாவில் இடம்பெறவுள்ள உலகலாவிய ரீதியாக பல்வேறு துறைகளை சார்ந்த இளம் நிபுணத்துவம் வாய்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளும் ஆசிய இளைஞர் மாநாட்டில் இலங்கை நாட்டை பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக மதுரங்குளி கனமூலையைச் சேர்ந்த அப்துல் முனாப் முஹம்மது அஸ்ஜத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப கல்வியை கனமூலை முஸ்லிம்  மகா வித்தியாலயத்தில் தொடர்ந்த முஹம்மது அஸ்ஜத் பின்னர்  புத்தளம் காஸிமியா அரபுக்கல்லூரியில் அல் ஆலிம் பட்டம் பெற்று உயர் தரத்தில் அதி சிறந்த சித்தி பெற்று யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


(ஊடகப்பிரிவு)

புத்தளம் தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சுய இலாபங்களுக்காக சிலர் இல்லாமலாக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் கொந்தராத்து முகவர்களாவர். அதே நேரம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் எமது தலைமையோடு சேர்ந்து குரலெழுப்ப கூட ஒருவராக நான் இருப்பேன்.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட போராளிகளுடனான சந்திப்பு (08) இடம் பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம் தொகுதி  மக்கள்  முப்பது வருடம் கண்ட அனுபவத்தினை கொண்டு, தற்போது சிறுபான்மை கட்சிகளின் கூட்டணியால் மாத்திரம் தான் வெற்றிபெற முடியும் என்ற மன நிலையிலுள்ளனர்.

30 வருட அனுபவத்தை கொண்டு நாம் நடத்திய ஆய்வில் தெளிவாக புலப்பட்ட உண்மையும் அதுவே, தனியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோ,அல்லது கூட்டணி மூலமோ நாம் வெறுமனே 25 ஆயிரத்திலிருந்து 27 ஆயிரத்திற்கு இடைப்பட்ட வாக்குகளை பெறும் போது ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவது என்பது மிக இலகுவானது.

நானோ வேறு கூட்டணியில் போட்டியிடும் வேறு யாராக இருந்தாலும் தங்களுக்கான வாக்குகளை பெற ஓடும் போது, கட்சியின் வாக்குகள் எழுச்சி பெறும்,யார் அதிக வாக்கினை பெறுகின்றாறோ அவர் வெற்றி பெற்றவராவார். இதுவே நிதர்சனமாகும் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

இந்த நிதர்சனத்தை மக்களும் அறிந்துள்ளனர். அதனை குழப்பியடியடிக்க பெரும்பான்மை கட்சி  முகவர்கள் கலமிறங்கியுள்ளனர். இவர்களின் சதியை இறைவனின் துணையோடு நாம் முறியடிப்போம். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி அமானிதமானது, இன்று எமது சமூகம் பல தரப்பட்ட சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இதற்கெதிராக போராடக்கூடிய தகுதியானவர்களாக பதவியில் அமருபர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

புத்தளத்தை சேர்ந்த முஸ்லிம் தொழிளதிபரான நயிம் அவர்களுக்கு சொந்தமான காணிக்குள் பிக்குகள் அத்துமீறி புகுந்த சம்பவம் தொடர்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

குறித்த காணியை தங்களுக்கு விற்பனை செய்ததாக கூறி போலி உறுதிச்சீட்டுடன், பிக்கு ஒருவரின் தலைமையிலான குழு குறித்த காணிக்குள் அத்து மீறி புகுந்து அந்த காணிக்குள் உள்ள வீட்டினுல் சிலையையும் வைத்திருந்தனர்.

இது தொடர்பில் தொழிளதிபர் நயீம் அவர்கள் பொலிஸ் முறைப்பாடை செய்திருந்தார். இதற்கமைய இன்று காலை 11:00 மணியளவில்  வழக்கு புத்தளம் நீதிமன்றத்தில் விஷாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விஷாரணைகளின் பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் 2:00மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் உண்மை நிலையை புத்தளம் மிரர் செய்திக்குழு ஆராய்ந்த வேலையில் பல உண்மைகள் வெளியாகின.

குறித்த காணியை நயிம் அவர்களுக்கு கடந்த மாதம் 05 ஆம் திகதி பெரும்பானைமை இனத்தை சேர்ந்த ஒருவர் நயீம் அவர்களுக்கு விற்பனை செய்திருந்தார். அதே நேரம் அவர் கடந்த 18 ஆம் திகதி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுவிட்டார்.

அதே நேரம் குறித்த பிக்குவிற்கு காணியை 28 ஆம் திகதி விற்பனை செய்ததாக உறுதி எழுதப்பட்டுள்ள நிலையில் அதனை எழுதிய வழக்கறிஞரை தேடிய போது அந்த பெயரில் குருநாகல் மாவட்டத்தில் வழக்கறிஞர் இல்லையென்ற தகவலும் கிடைக்கப்பெற்றது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க நீதிமன்ற வளாகத்தில் நாம் காத்திருக்கின்றோம்.

புத்தளம்/ மதுரங்குளி கனமூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தீயிட்டு கொழுத்த முயற்சித்துள்ளார்.

குறித்த சிறுமி ஆண் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில் அந்த ஆணின் தாய் குறித்த சிறுமியை அடித்ததனாலேயே குறித்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக எமது இணையத்தள செய்தி நிரூபர் தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த சிறுமி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறுமியின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஜெசீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எச்.எம். இன்பாஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புளுதிவயல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட அல்-பலாஹ் கரப்பந்தாட்ட மைதானம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக பெர்னாண்டோ அவர்களினால்  நேற்று வைபவ ரீதியாக் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாஹிர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

புத்தளம் - அநுராத புர வீதியில்,  இன்று (04) காலை, வவுனியா நோக்கி பயணித்த மஹேந்திரா ஜீப் ரக வண்டி ஒன்று கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மதுரங்குளி புழுதிவயலை சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணித்துள்ளதுடன், குறித்த வாகனத்தின் சாரதி புத்தளம் தள வைத்திய சாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றும் ஒரு இளைஞர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விஷாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget