Articles by "Local News"




சுஐப் எம்.காசிம் -

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல் அம்பாரை மாவட்டத்தில் எட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திலிருந்துதான் இந்த இணக்க அரசியல் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை எந்தக் கட்சிகளிலிருந்தாவது இங்கு முஸ்லிம்கள் தெரிவாகச் சந்தர்ப்பம் இருந்ததால், புத்தளம் மாவட்டம் இணக்க அரசியலுக்கான மையமாகப் பார்க்கப்பட்டுள்ளதாக இம்முயற்சியை நோக்குவோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் புத்தளம் நான்காம் இடத்திலுள்ளதே, இங்கு ஒரு ஆசனத்தை இழப்பதா? என்பதுதான் இணக்க அரசியலுக்கான இந்த வித்து இங்கு விதைக்கப்பட்டதற்கான காரணம். 

முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் தெரிவான மாவட்டமிது. நிதியமைச்சர் நெய்னா மரிக்காரை ஈன்ற மண்ணிது. இங்கு ஒரு பிரதிநிதியை இழப்பது, சமூக அரசியல் அடையாளத்துக்கான தோல்வியாகவே பார்க்கப்படும். மட்டுமல்ல பிரித்தாளும் தந்திரங்களுக்குப் பலியாகும் மாவட்டமாகவும் பிறரால் இது பார்க்கப்படாலாம் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகள். முப்பது வருடங்களாக மக்களால் தெரிவாகும் எம்.பியின்றிக் கிடந்த இந்த மாவட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான பல முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலும், நகரபிதா பாயிஸ் தலைமையிலான குழு, ஒட்டகச் சின்னத்திலும் போட்டியிட்டு, சமூக அடையாளத்தை வென்றெடுக்க முயற்சித்தன. எனினும், இந்த முயற்சிகள் இரு தரப்பிற்கும் கைகூடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், சொற்ப வாக்குகளால் நவவி சமூக அடையாளத்துக்கான வாய்ப்பை இழந்தமை பெரும் வேதனை. இதனால்தான் என்ன விலை கொடுத்தும், இம்முறை முஸ்லிம் சமூக அடையாளம் வெல்லப்பட வேண்டுமென்ற சிந்தனைத் தீவிரம், எல்லோரையும் ஓரணியில் இணைத்திருக்கிறது. 

வடபுலத்தில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தையே அரவணைத்து, ஆறுதலளித்ததால் முஸ்லிம் சமூகம் தனித்த ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கு அத்திவாரமிட்ட மாவட்டத்தில், அடையாள அரசியல் இல்லாமல் செய்யப்படுவதை ஏற்க முடியாதே! இந்த எண்ணங்கள்தான் எல்லோரையும் இணைத்துள்ளது. 
புலம்பெயர்வது இஸ்லாமிய வரலாற்றுக்குப் புதிய விடயமல்ல. இறைதூதர் முஹம்மது நபியவர்கள், தனது பிறப்பிடமான மக்காவைவிட்டு மதீனாவுக்கு வந்தது முதல் இவ்வரலாறுகள் நீள்கிறது. ஆனால், வெவ்வேறு பின்னணிகள் இப்புலப்பெயர்வுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. ஒரு இனமே அடையாளம் காணப்படுவதற்கு அடிகோலிய புத்தளம் மாவட்டம் ஒன்றிணைந்துள்ளமை சாதாரண சின்னத்திலல்ல, தராசு சின்னத்தில். அரபியில் "மீசான்" எனப்படும் இச்சின்னம், முஸ்லிம்களின் மத, மறுமை உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மரணித்த பின்னர் மண்ணறையிலிருந்து எழுப்பப்படும் மறுமைநாளில், உலக வாழ்க்கையில் செய்த நன்மை, தீமைகளை அளந்து நிறுத்துப்பார்க்கவும், பட்டோலை (சொர்க்கமா, நரகமா) என்ற தீர்ப்புப் பத்திரம் வழங்கப்படுவதும் இந்த தராசின் "மீசான்" நிறுவையில்தான் என்பது முஸ்லிம்களின் மத நம்பிக்கை. புனித வேத நூலான திருக்குர்ஆனும் "அளவை, நிறுவைகளில் மோசடி செய்யாதீர்" என எச்சரிக்கும் வசனமும் இந்த "மீசானையே" ஞாபகமூட்டுகிறது. எனவே, எதிர்பார்ப்பதுபோல இந்த முயற்சியை சமூகத்தின் அமானிதமாக அடையாளப்படுத்த, "மீசான்" என்ற சொற்பிரயோகத்தை முஸ்லிம் தலைவர்கள் தாராளமாக உச்சரிப்பர். மற்றும் இச்சின்னம் முஸ்லிம் அரசியலுக்குப் புதியதுமில்லை.

1987 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தராசுச் சின்னத்தையே தெரிவு செய்திருந்தது. கட்சி அங்கீகரிக்கப்படாத அன்றைய சூழலில், சுயேச்சையாகப் போட்டியிட இக்கட்சிக்கு வேறு சின்னம் இருக்கவில்லை. இது மட்டுமா? முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட ஷேகு இஸ்ஸதீன், தனது முஸ்லிம் கட்சிக்கான சின்னமாகவும் இந்த தராசையே "மீசான்" தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, இன்றைய தேர்தலில் இந்த முயற்சியின் எடைகள் கனதியாகுமெனப் பலர் எதிர்பார்க்கின்றனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரபல அரசியல் புள்ளிகள் இவ்வணிக்குப் பலம் சேர்த்துள்ளனர். நகரபிதா பாயிஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எஹியா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தாஹிர், புத்தளம் நகர சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலிசப்ரி, ஐ.தே.க அலிகான், மக்கள் காங்கிரஸ் முஸம்மில் உள்ளிட்ட பலரின் உள்வாங்கல்கள், முஸ்லிம் சமூக அரசியல் அடையாளத்தை இம்முறை புத்தளத்தில் வென்றெடுக்கவே செய்யும். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சிகளும் தத்தமது அணிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை "தாயும் பிள்ளையானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதை உணர்த்தியுள்ளது. முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு குறுக்காகக் களமிறக்கப்பட்டுள்ள இவர்களை, இம்மூன்று கட்சிகளும் களமிறக்கக் காரணமென்ன? இதுதான் புத்தளம் மாவட்டம் எங்கும் எதிரொலிக்கும் முஸ்லிம்களின் ஆதங்கங்கள். இந்த மாவட்டத்தின் மகிமை, மகத்துவம் என்பவற்றைக் கௌரவித்துத்தான், கே.ஏ. பாயிஸை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், நவவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எம்.பியாக்கி அழகுபடுத்தின. ஆனால், இந்த அரசியல் அழகு சமூக அடையாளமாக வேண்டுமென்றே புத்தளம் மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். 

முப்பது வருடங்களுக்கு மேலாக, வெளியேற்றப்பட்ட நிலையில், இங்கு அகதியாக வாழ்ந்த முஸ்லிம்கள், பிறப்பத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணம் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இழந்துள்ளனர். இதனால் இவ்வகதிகள் புத்தளத்தில்தான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. இதற்கான அங்கீகாரமாக, அடையாளமாக புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெல்லப்பட வேண்டும். இந்த வெற்றியை வீழ்த்தும் வேட்டுக்களாக, வேறு கட்சிகளால் தராசுக்கு "மீசான்" வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்கள் வேலை செய்யக் கூடாது. இவ்வாறு செய்வது, சகோதரத்துவ மண்ணுக்கு செய்யும் சதியாகவே அளக்கப்படும். 

வடபுலத்து மக்களின் வெளியேற்றம் புத்தளத்தை எப்படிச் சகோதரத்துவப் பிணைப்பில் இணைத்ததென்பதற்கு, முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் கவிதைகள் சாட்சி. "தோப்பு வீழ்ந்து தோழமையானது" என்ற அவரது அழகிய கவிவரிகள், புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கருணையை எடுத்துக்காட்டும் அற்புதக் கவிநயம். அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் குடிசைகளில், கூடாரங்களில் குடியமர்த்துவதற்கு, கற்பிட்டிப் பிரதேசத்தில் ஓங்கி, உயர்ந்து நின்ற தென்னந்தோப்புக்களை வெட்டி, வீழ்த்தி தட்டாந்தரையில் குடிசைகள் அமைத்ததை, மர்ஹும் அஸ்வரின் கவிநயங்கள் எமது மனக்கண்கள் முன் கொண்டு வருகின்றன. அங்கிருந்த மணற்பாங்கான பிரதேசத்தில் வாழ்வியல் இருப்புக்களை அமைக்கும் பணியிலீடுபட்டிருந்தோரின் பாதங்கள் மண்ணுள் புதைந்தன. இவை வரவேற்புக்களால் வீசப்பட்ட மலர்க் குவியல்களுக்குள் நுழைந்த பாதங்கள் என்றார் மர்ஹும் அஸ்வர். 

இப்பணிகளில் மர்ஹும் அஷ்ரபின் பங்களிப்புக்களும் பெறுமதியானதால்தான், இம்மாவட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த சமூக அரசியல் அடையாளம் மீண்டும் உயிர்ப்பெற ஆரம்பித்தது. இந்த மீசானால் அளக்கப்படும் முயற்சிகள் சாத்தியமற்றுப் போக எந்தச் சந்தர்ப்பங்களும் இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் தொகுதியை வைத்தே, வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.


கொவிட் - 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து தௌிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்.

முந்தல்  வைத்தியசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு நேற்று  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுள்ளது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த இளைஞன் உயிரிழந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைக்கும் வரை வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நிலையில் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் இன்று காலை தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



இலங்கையில் இன்று (10) இதுவரையில் மாத்திரம் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர். 

இன்றைய தினமே இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட 286 பேர் உள்ளடங்குவதாகவும் மற்றுமொருவர் வெலிகட சிறைச்சாலை கைது ஒருவர் எனவும் ஏனையவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்தும், 3 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் மற்றுமொருவர் பாகிஸ்தானில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 300 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது, 463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 472 பேர் இருப்பதுடன் 204 அதிகாரிகள் சேவை செய்வதாகவும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கான பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 

அத்துடன் அங்கு சேவையாற்றிய 90 பேர் விடுமுறைகளுக்காக தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடுகெலியாவ தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய ஆலோசகரின் தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என புத்தளம் மாவட்ட சுகாதார பரிசோதகர் வைத்தியர் தினூஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவால் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர். குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரச பேருந்துகளை பயன்படுத்தி புத்தளம் பகுதி வாக்காளர்களை ஏற்றிச் சென்றமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு அமைய தம்மை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் தனது அடிப்படை உரிமைகள் மனுவினூடாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் குறிறப்புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டு தம்மை கைது செய்ய தயாராகி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதன்மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் ஆகவே வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் உச்சநீதிமன்றத்தை கேட்டுள்ளார்.

முன்னால்  மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற வேற்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்களின் சொந்த நிதியில் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இன மக்கள் வாழும்  மலர்வத்தை கிராமத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அத்தியாவசிய தேவையாக உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.


இன்று நல்லிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி அரச அச்சக திணைக்களத்தினால் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சிற்கு வாக்களித்து எம்மால் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனது, நீண்ட காலமாக புத்தளம் மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கிய சிறுபான்மை கட்சிகள் இன்று வரை முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை பெற எட்டிய முயற்சிகள் எதுவுமில்லை,

ஆனால் மிக குறுகிய காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு அதாவது கடந்த பொதுத்தேர்தலில் முதல்தடவையாக களமிறங்கி சொட்ப  வாக்குகளால் தோல்வியுற்ற போதிலும் கட்சியின் செயலாளரை இழந்து ,இன்று வரை வழக்கு பேசிக்கொண்டிருக்கின்றார், அதே நேரம்  மன்னார் மாவட்ட பொதுஜன பெரமுனாவின் அமைப்பாளராக அண்மையில் பதவிபெற்று உங்களுக்கெதிராக எஹியா பாய் செயற்படுகிறார். இவர்களை எதிர்த்து புத்தளம் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியலை தந்து கௌரவ படுத்தியுள்ளீர்கள்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு , தற்போதைய நகர சபை தலைவர் பாயிஸ் அவர்களின் பிரதேச வாத கருத்துக்களால் ,துரோகத்தனத்தால் மக்கள் பிழையாக வழிநடத்த பட்டதே உண்மை, எனினும் இதய சுத்தியுடன் நீங்கள் புத்தளம் மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதியை வென்றெடுக்க ஆய்வுகளை மேற்கொண்டு தனித்து களமிறங்கினால் மாத்திரமே வெற்றியடைய முடியும் என்ற முடிவில் உங்கள் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ,பிராந்திய அமைப்பாளர்கள் மூலம் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ,சுதந்திர கட்சி  புத்தளம் தொகுதி உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்களுடன் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடாத்தினீர்கள்.

புத்தளம் மாவட்ட மக்களுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுத்தருவதற்காக சுமார் இரண்டரை வருடங்கள் கஷ்ட்டப்பட்டீர்கள் , உங்களின் தியாகங்களை புத்தளம் மக்கள் நாம் உணர்ந்துள்ளோம்.

இதுவரை எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாது இருந்து விட்டு புத்தளம் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் மொட்டுடன் சங்கமிக்க ஆளுநர் முஸாமில் அவர்களுடனும் ,பசில் ராஜபக்ஷ உடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ,பேச்சுவார்த்தை சரிவராத பட்சத்தில் வழியில்லாமல் மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையிடம் மண்டியிட்டுள்ள துரோகத்தனத்தை மக்கள் மறக்கவில்லை.அதே நேரம் கட்சியின் போராளிகளும் மறக்கவில்லை.
அதே நேரம் ஏற்று மீண்டும் மொட்டுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் அக்கட்சியின் முன்னால் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் யானையுடன் சங்கமிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றார். இவ்வாறு ஸ்த்தீரம் இல்லாத நிலையில் , யார் வேண்டுமானாலும் எமது சின்னத்தில் போட்டியிடலாம் என முஸ்லீம் காங்கிரஸ்  கட்சியின் தலைமை விடுத்துள்ள அறிக்கையானது அந்த தலைமைத்துவத்தின் பண்புகைளை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதாய் அடையாளப்படுத்துகின்றது.

எனவே புத்தளம் மாவட்ட மக்கள் உங்களின் இதய சுத்தியுடனான செயற்பாட்டை வரவேற்கின்றோம். நீங்கள் உங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதோடு , தயவு செய்து உங்களின் முயற்சிகளில் பின்நிற்க வேண்டுமெனவும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இதற்கு முஸ்லீம் காங்கிரசின் போராளிகளும் ஆதரவு வழங்கும் மனப்பான்மையுடன் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டுவதுடன், மயில் சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வேண்டுகோள் விடுகின்றோம். என அவர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(புத்தளம் மாவட்ட சிவில் சமூக அமைப்பு)

நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நுகேகொடை நீதவான் மொஹமட் மிஹாயில், அவருக்கு பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார். .  
5 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவித்துள்ள நீதவான், அவருக்கு  வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சஜித் தலைமையிலான "ஐக்கிய மக்கள் சக்தி" எனும் அரசியல் கூட்டணியில் இணையும் முடிவை தழிழ் முற்போக்கு கூட்டணி இன்று (26) அதிகார பூர்வமாக அறிவித்தத

இதற்காக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச உட்பட பல முக்கியஷ்தர்கள் கலந்துகொண்டனர்.


மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற  இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் டுவிட்டர் பக்கத்திலும் இந்தக்கண்டனம் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய அனுசரணையில் இருந்து விலகிச் செல்வதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சற்று முன்னர் அறிவித்தார்.

வரப்போகின்ற ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக தங்கள்  கட்சி திகழும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த கருத்தினை குறிப்பிட்டார்.

தங்கள் கட்சி சஜித் தலைமையிலான பாரிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சின்னம் தொடர்பான சிறு சிக்கல் இருப்பதாகவும் யானையா அன்னமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக  அவர் குறிப்பிட்டார்.

மனோ கனேசன் , திகாம்பரம் , ரவுப் ஹக்கீம் ஆகியோர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்க பேசி எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் அததெரணவுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து கலந்துரையாடுவது இந்த சந்திப்பின் நோக்கம் என ஆஐணக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அன்றைய தினமே தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் அன்றைய தினம் காலை 9.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

புத்தளம்-ஆண்டிமுனைத் தமிழ் மகா வித்தியாலயத்தின் வைர விழா(12) அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  ஜுனூத் காசிம் அவர்கள் பிரதேசத்தில் சிறந்த ஊடகவியலாளருக்கான  பொன்னாடைப் அணிவித்து  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பட்டார்.

ஹோமாகம முன்னாள் மாவட்ட நீதவான் சுனில் விக்ரம அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான கான்ஸ்டபிள் ஒருவருக்கும் தலா 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதமளவில், ஹங்வெல்ல, எம்புல்கமுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் உரிமையாளரிடமிருந்து ரூபா 3 இலட்சம் பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றத்தின் அடிப்படையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கிய நீதவான் பிரதீப் ஹெட்டியாரச்சி, குற்றவாளிகள் இருவருக்கும் ரூபா 20 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, இலஞ்சமாக பெற்ற ரூபா 3 இலட்சம் பணத்தையும் தண்டனையாக அரசாங்கத்திற்கு செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரென பிரதமர் நம்பிக்கை
பாராளுமன்றத்தை மார்ச் மாதம் கலைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிடுவாரெனத் தானும்,ஏனைய அமைச்சர்களும் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
பதுளை எட்டாம்பிட்டிய – வெல்லவெல நீர் விநியோகத் திட்டத்தை நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்: பன்னிரெண்டு கிராமங்களைச் சேர்ந்த 15ஆயிரம்பேர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
எம்மால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமில்லை.
கடந்த அரசாங்கம் பெரும் கடன்சுமையை ஏற்படுத்திச் சென்றுள்ளது.இச்சுமையை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.பாராளுமன்றம் நாளை (இன்று) கூடும்போது விஷேட சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இச் சட்டமூலத்தை எதிர்க்கட்சி நினைத்தால் தோற்கடிக்கலாம்.
இவ்வாறு தோற்கடிக்கப் பட்டால் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.இதைத் தவிர வேறு வழி எமக்கு இல்லை. பொதுத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அமைக்கப்படும் அரசு மக்களின் அரசாகவே இருக்கும்.கடந்த அரசைப் போன்று நித்திரை கொள்ளும் அரசாகவோ, வேலைத் திட்டங்களை மேற்கொள்ளாத அரசாகவோ, பேச்சளவில் மட்டும் செயற்படும் அரசாகவோ இருக்காது.அரசியல் பழிவாங்கல்களும் எமது நோக்கமில்லை. எமக்கு எதிராகக் கடந்த அரசாங்கம் எத்தனையோ குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியது.
எனினும் எதையுமே அவர்களால் நிரூபிக்க முடியாமற்போனது.கடந்த அரசின் மத்திய வங்கி பிணைமுறிக் கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

30 வருடம் பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கும் புத்தளம் தொகுதி தொடர்ந்தேச்சியாக பெரும்பான்மை கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து,  தன் இறுப்புக்கான இறுதி போராட்டம் என சில கல்விமான்கள் கூறுமளவு முக்கியமான தேர்தலாக 2020 பொதுத்தேர்தல் அமைந்துள்ளது.

இந்த நிலையையில் கூட்டணியை அமைப்பதற்காக முன்னின்ற முன்னால் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான நியாஸ் அவர்கள், தற்போது கூட்டணியை விட்டு யானையில் பயணிப்பது தொடர்பாக பேசுவதாகவும்,  கட்சியின் தலைவரின் தலைமையில் புத்தளம் மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள் கூடிய சந்தர்ப்பத்தில் அவர் கூட்டணியில் உள்ளவர்கள் வென்று பெசில் ராஜபக்ஷவுடன் இணைந்து விடுவார்கள் என்ற கருத்தையும் கூறி இருந்ததுடன், தங்களின் ஆதரவாளர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அவர் யானையுடன் பயணிப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாகவும், அவர்களின் விருப்பை கேட்டறிந்ததாகவும்,  முஸ்லிம்காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பெரும்பான்மை கட்சிக்கு வாக்களித்து தெளிவான நிலையில் மக்கள் கூட்டணியை வரவேற்கும் சந்தர்ப்பத்தில் எதற்காக நியாஸ் மாற்றமாக நடக்கிறார் என்ற வினா கடந்த காலங்களில் ரங்கே பண்டார பா.உறுப்பினருக்கு வேலை செய்ததாகவும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பலமிழக்க செய்ததாகவும், பல தரப்பட்ட சர்ச்சைக்குறிய குற்றச்சாட்டுக்களை அவர் சுமந்துள்ள நிலையில் தெளிவான விளக்கத்தை நாம் வினவிய போது, இன்னும் உறுதியான நிலைப்பாடு இல்லையென்றும் உறுதியான தீர்மானத்தின் பின் விளக்கமளிப்பதாகவும் அவர்  புத்தளம்மிரருக்கு தெரிவித்தார்.



க்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயம் கையெழுத்திடுவார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல பலமான பாராளுமன்றமொன்று அவசியமாகும். நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கு வழங்கியிருக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுக்கையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவுடன் சமகால பாராளுமன்றத்துக்கு நான்கரை வருடங்கள் நிறைவடைகின்றன. மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் அன்றைய தினம் நள்ளிரவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடுவார்.
புதிய பாராளுமன்றத்தை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு மீண்டும் மக்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்படும். சமகால பாராளுமன்றம் குழப்பங்கள் நிறைந்ததோர் பாராளுமன்றமாகும். நாட்டை கட்டியெழுப்ப சக்திவாய்ந்த பாராளுமன்றமொன்று அவசியமாகும்.
நாட்டையும் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதற்கான அடித்தளத்தை கடந்த இரண்டரை மாதக் காலப்பகுதியில் இட்டுள்ளோம். படித்த இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பளிக்கும் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் சக்திவாய்ந்த பயணமொன்றுக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள பலமான பாராளுமன்றம் அவசியமாகும். நாட்டின் சுயாதீனம், வெளிநாடுகளுக்கு அடிப்பணியாத பொறிமுறையொன்று அவசியமாகும். நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். மக்கள் வழங்கிய வாக்குறுதியின் எதிரொலிகள் சிறிகொத்தவின் உள்ளே மோதல்களாக மாறியுள்ளன என்றார்.

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget