Articles by "Sri lanka"




சுஐப் எம்.காசிம் -

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல் அம்பாரை மாவட்டத்தில் எட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திலிருந்துதான் இந்த இணக்க அரசியல் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை எந்தக் கட்சிகளிலிருந்தாவது இங்கு முஸ்லிம்கள் தெரிவாகச் சந்தர்ப்பம் இருந்ததால், புத்தளம் மாவட்டம் இணக்க அரசியலுக்கான மையமாகப் பார்க்கப்பட்டுள்ளதாக இம்முயற்சியை நோக்குவோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் புத்தளம் நான்காம் இடத்திலுள்ளதே, இங்கு ஒரு ஆசனத்தை இழப்பதா? என்பதுதான் இணக்க அரசியலுக்கான இந்த வித்து இங்கு விதைக்கப்பட்டதற்கான காரணம். 

முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் தெரிவான மாவட்டமிது. நிதியமைச்சர் நெய்னா மரிக்காரை ஈன்ற மண்ணிது. இங்கு ஒரு பிரதிநிதியை இழப்பது, சமூக அரசியல் அடையாளத்துக்கான தோல்வியாகவே பார்க்கப்படும். மட்டுமல்ல பிரித்தாளும் தந்திரங்களுக்குப் பலியாகும் மாவட்டமாகவும் பிறரால் இது பார்க்கப்படாலாம் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகள். முப்பது வருடங்களாக மக்களால் தெரிவாகும் எம்.பியின்றிக் கிடந்த இந்த மாவட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான பல முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலும், நகரபிதா பாயிஸ் தலைமையிலான குழு, ஒட்டகச் சின்னத்திலும் போட்டியிட்டு, சமூக அடையாளத்தை வென்றெடுக்க முயற்சித்தன. எனினும், இந்த முயற்சிகள் இரு தரப்பிற்கும் கைகூடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், சொற்ப வாக்குகளால் நவவி சமூக அடையாளத்துக்கான வாய்ப்பை இழந்தமை பெரும் வேதனை. இதனால்தான் என்ன விலை கொடுத்தும், இம்முறை முஸ்லிம் சமூக அடையாளம் வெல்லப்பட வேண்டுமென்ற சிந்தனைத் தீவிரம், எல்லோரையும் ஓரணியில் இணைத்திருக்கிறது. 

வடபுலத்தில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தையே அரவணைத்து, ஆறுதலளித்ததால் முஸ்லிம் சமூகம் தனித்த ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கு அத்திவாரமிட்ட மாவட்டத்தில், அடையாள அரசியல் இல்லாமல் செய்யப்படுவதை ஏற்க முடியாதே! இந்த எண்ணங்கள்தான் எல்லோரையும் இணைத்துள்ளது. 
புலம்பெயர்வது இஸ்லாமிய வரலாற்றுக்குப் புதிய விடயமல்ல. இறைதூதர் முஹம்மது நபியவர்கள், தனது பிறப்பிடமான மக்காவைவிட்டு மதீனாவுக்கு வந்தது முதல் இவ்வரலாறுகள் நீள்கிறது. ஆனால், வெவ்வேறு பின்னணிகள் இப்புலப்பெயர்வுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. ஒரு இனமே அடையாளம் காணப்படுவதற்கு அடிகோலிய புத்தளம் மாவட்டம் ஒன்றிணைந்துள்ளமை சாதாரண சின்னத்திலல்ல, தராசு சின்னத்தில். அரபியில் "மீசான்" எனப்படும் இச்சின்னம், முஸ்லிம்களின் மத, மறுமை உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மரணித்த பின்னர் மண்ணறையிலிருந்து எழுப்பப்படும் மறுமைநாளில், உலக வாழ்க்கையில் செய்த நன்மை, தீமைகளை அளந்து நிறுத்துப்பார்க்கவும், பட்டோலை (சொர்க்கமா, நரகமா) என்ற தீர்ப்புப் பத்திரம் வழங்கப்படுவதும் இந்த தராசின் "மீசான்" நிறுவையில்தான் என்பது முஸ்லிம்களின் மத நம்பிக்கை. புனித வேத நூலான திருக்குர்ஆனும் "அளவை, நிறுவைகளில் மோசடி செய்யாதீர்" என எச்சரிக்கும் வசனமும் இந்த "மீசானையே" ஞாபகமூட்டுகிறது. எனவே, எதிர்பார்ப்பதுபோல இந்த முயற்சியை சமூகத்தின் அமானிதமாக அடையாளப்படுத்த, "மீசான்" என்ற சொற்பிரயோகத்தை முஸ்லிம் தலைவர்கள் தாராளமாக உச்சரிப்பர். மற்றும் இச்சின்னம் முஸ்லிம் அரசியலுக்குப் புதியதுமில்லை.

1987 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தராசுச் சின்னத்தையே தெரிவு செய்திருந்தது. கட்சி அங்கீகரிக்கப்படாத அன்றைய சூழலில், சுயேச்சையாகப் போட்டியிட இக்கட்சிக்கு வேறு சின்னம் இருக்கவில்லை. இது மட்டுமா? முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட ஷேகு இஸ்ஸதீன், தனது முஸ்லிம் கட்சிக்கான சின்னமாகவும் இந்த தராசையே "மீசான்" தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, இன்றைய தேர்தலில் இந்த முயற்சியின் எடைகள் கனதியாகுமெனப் பலர் எதிர்பார்க்கின்றனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரபல அரசியல் புள்ளிகள் இவ்வணிக்குப் பலம் சேர்த்துள்ளனர். நகரபிதா பாயிஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எஹியா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தாஹிர், புத்தளம் நகர சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலிசப்ரி, ஐ.தே.க அலிகான், மக்கள் காங்கிரஸ் முஸம்மில் உள்ளிட்ட பலரின் உள்வாங்கல்கள், முஸ்லிம் சமூக அரசியல் அடையாளத்தை இம்முறை புத்தளத்தில் வென்றெடுக்கவே செய்யும். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சிகளும் தத்தமது அணிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை "தாயும் பிள்ளையானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதை உணர்த்தியுள்ளது. முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு குறுக்காகக் களமிறக்கப்பட்டுள்ள இவர்களை, இம்மூன்று கட்சிகளும் களமிறக்கக் காரணமென்ன? இதுதான் புத்தளம் மாவட்டம் எங்கும் எதிரொலிக்கும் முஸ்லிம்களின் ஆதங்கங்கள். இந்த மாவட்டத்தின் மகிமை, மகத்துவம் என்பவற்றைக் கௌரவித்துத்தான், கே.ஏ. பாயிஸை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், நவவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எம்.பியாக்கி அழகுபடுத்தின. ஆனால், இந்த அரசியல் அழகு சமூக அடையாளமாக வேண்டுமென்றே புத்தளம் மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். 

முப்பது வருடங்களுக்கு மேலாக, வெளியேற்றப்பட்ட நிலையில், இங்கு அகதியாக வாழ்ந்த முஸ்லிம்கள், பிறப்பத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணம் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இழந்துள்ளனர். இதனால் இவ்வகதிகள் புத்தளத்தில்தான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. இதற்கான அங்கீகாரமாக, அடையாளமாக புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெல்லப்பட வேண்டும். இந்த வெற்றியை வீழ்த்தும் வேட்டுக்களாக, வேறு கட்சிகளால் தராசுக்கு "மீசான்" வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்கள் வேலை செய்யக் கூடாது. இவ்வாறு செய்வது, சகோதரத்துவ மண்ணுக்கு செய்யும் சதியாகவே அளக்கப்படும். 

வடபுலத்து மக்களின் வெளியேற்றம் புத்தளத்தை எப்படிச் சகோதரத்துவப் பிணைப்பில் இணைத்ததென்பதற்கு, முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் கவிதைகள் சாட்சி. "தோப்பு வீழ்ந்து தோழமையானது" என்ற அவரது அழகிய கவிவரிகள், புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கருணையை எடுத்துக்காட்டும் அற்புதக் கவிநயம். அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் குடிசைகளில், கூடாரங்களில் குடியமர்த்துவதற்கு, கற்பிட்டிப் பிரதேசத்தில் ஓங்கி, உயர்ந்து நின்ற தென்னந்தோப்புக்களை வெட்டி, வீழ்த்தி தட்டாந்தரையில் குடிசைகள் அமைத்ததை, மர்ஹும் அஸ்வரின் கவிநயங்கள் எமது மனக்கண்கள் முன் கொண்டு வருகின்றன. அங்கிருந்த மணற்பாங்கான பிரதேசத்தில் வாழ்வியல் இருப்புக்களை அமைக்கும் பணியிலீடுபட்டிருந்தோரின் பாதங்கள் மண்ணுள் புதைந்தன. இவை வரவேற்புக்களால் வீசப்பட்ட மலர்க் குவியல்களுக்குள் நுழைந்த பாதங்கள் என்றார் மர்ஹும் அஸ்வர். 

இப்பணிகளில் மர்ஹும் அஷ்ரபின் பங்களிப்புக்களும் பெறுமதியானதால்தான், இம்மாவட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த சமூக அரசியல் அடையாளம் மீண்டும் உயிர்ப்பெற ஆரம்பித்தது. இந்த மீசானால் அளக்கப்படும் முயற்சிகள் சாத்தியமற்றுப் போக எந்தச் சந்தர்ப்பங்களும் இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் தொகுதியை வைத்தே, வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.


கொவிட் - 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து தௌிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்.

முந்தல்  வைத்தியசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு நேற்று  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுள்ளது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த இளைஞன் உயிரிழந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைக்கும் வரை வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நிலையில் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் இன்று காலை தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



இலங்கையில் இன்று (10) இதுவரையில் மாத்திரம் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர். 

இன்றைய தினமே இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட 286 பேர் உள்ளடங்குவதாகவும் மற்றுமொருவர் வெலிகட சிறைச்சாலை கைது ஒருவர் எனவும் ஏனையவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்தும், 3 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் மற்றுமொருவர் பாகிஸ்தானில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 300 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது, 463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 472 பேர் இருப்பதுடன் 204 அதிகாரிகள் சேவை செய்வதாகவும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கான பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 

அத்துடன் அங்கு சேவையாற்றிய 90 பேர் விடுமுறைகளுக்காக தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடுகெலியாவ தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய ஆலோசகரின் தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என புத்தளம் மாவட்ட சுகாதார பரிசோதகர் வைத்தியர் தினூஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


கந்த காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் உதவியாளர்கள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற  இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் டுவிட்டர் பக்கத்திலும் இந்தக்கண்டனம் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய அனுசரணையில் இருந்து விலகிச் செல்வதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சற்று முன்னர் அறிவித்தார்.

வரப்போகின்ற ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக தங்கள்  கட்சி திகழும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த கருத்தினை குறிப்பிட்டார்.

தங்கள் கட்சி சஜித் தலைமையிலான பாரிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சின்னம் தொடர்பான சிறு சிக்கல் இருப்பதாகவும் யானையா அன்னமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக  அவர் குறிப்பிட்டார்.

மனோ கனேசன் , திகாம்பரம் , ரவுப் ஹக்கீம் ஆகியோர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்க பேசி எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



அவள் மென்மையானவள் என்றா சொல்கிறீர்கள்!!

உடலின் ஒட்டுமொத்த வலியையும்
ஓரிடத்தில் குவித்து
ஊசி முனையாலதை மெல்ல மெல்ல குத்திக்கிழித்தெடுக்கும்
வேதனையை
தனக்குள் மறைத்து
புன்னகைக்கிறாளே
அவளா மென்மையானவள்!!

அதையும் மீறி வெடித்துச்சிதறும்
கோபங்கள் அத்தனையுக்கும்
அர்த்தம் தேடித்திரியாதீர்கள்?


அடிவயிற்றை தடவிக்கொடுக்கும்
அவள் கரங்களுக்குக்கூட
அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

நிச்சயம் அவற்றிட்கு
காரணங்கள் அவளுக்கே தெரியாது!!

இயற்கையின் மாறுதல்களவை...

அவளையறியாமல் கசியுமந்த
வலிகளின் மழைக்கு
நனைந்து விட்டீர்களெனில்
கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்
சில தினங்களில் அவளே தலைதுவட்டி
முத்தமிடுவாள்!!

இல்லையெனில்
குடைபிடித்துக்கொள்ளுங்கள்!!

வழமைக்கு மாறாய்
வியர்த்துக்கொட்டும் போது
ஏற்படும் அசெளகரியங்களால்
உங்கள் மீது வீசி எறியும் வார்தைகளை
சேர்த்து முத்தங்களாய் அவளுக்கு திருப்பிக்கொடுங்கள்...

குறைந்துவிட மாட்டீர்கள்!!

உங்கள் மீதுள்ள வெறுப்பால்
அவள் அப்படி செய்ய வில்லை
அவளுக்கே அவள் மீது
வெறுப்பாயிருக்கும் போது
உங்கள் மீதும் அதை கொஞ்சம்
அப்பிவிடுகிறாள் அவ்வளவு தான்!!

இரைபைக்கு உணவு பிடிக்காமல்
துப்பிடும் போது
அது கோபமாய் உங்கள் மேல் கக்கப்பட்டிருக்கக்கூடும்...

மாதமொருறை அவள் அனுபவிக்கும்
அசெளகரியங்களால்
உணர்ச்சிவசப்பட்டு
அவள் செய்யும் வேலைகளை
பேசும் விடயங்களை
மறந்து மன்னித்து விடுங்கள்!!

அவளையறியாமல்
நடக்கும் இம்மாற்றங்களுக்கு
அவள் காரணமல்லவே!!

மீண்டும் சொல்கிறேன்

உங்கள் மீதுள்ள வெறுப்பால்
அவள் அப்படி செய்ய வில்லை
அவளுக்கே அவள் மீது
வெறுப்பாயிருக்கும் போது
உங்கள் மீதும் அதை கொஞ்சம்
அப்பிவிடுகிறாள்
அவ்வளவு தான்!!

புரிந்துணர்வுடன் வாழ்தலே
வாழ்தலென்பேன்!!

அந்த ஐந்து........நாட்களுக்கேனும்.....

வாழ்ந்துதான்
பாருங்களேன்!!

#சப்னா_செய்ன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா அமைப்பாளர்  ரபீல் விபத்தில் மரணம்!

வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாழைச்சேனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் ரபீல் மரணம் ஆனார்.

தற்போது ஜனாஷா வாகரை வைத்தியசாலையில்.


க்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயம் கையெழுத்திடுவார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல பலமான பாராளுமன்றமொன்று அவசியமாகும். நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கு வழங்கியிருக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுக்கையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவுடன் சமகால பாராளுமன்றத்துக்கு நான்கரை வருடங்கள் நிறைவடைகின்றன. மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் அன்றைய தினம் நள்ளிரவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடுவார்.
புதிய பாராளுமன்றத்தை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு மீண்டும் மக்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்படும். சமகால பாராளுமன்றம் குழப்பங்கள் நிறைந்ததோர் பாராளுமன்றமாகும். நாட்டை கட்டியெழுப்ப சக்திவாய்ந்த பாராளுமன்றமொன்று அவசியமாகும்.
நாட்டையும் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதற்கான அடித்தளத்தை கடந்த இரண்டரை மாதக் காலப்பகுதியில் இட்டுள்ளோம். படித்த இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பளிக்கும் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் சக்திவாய்ந்த பயணமொன்றுக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள பலமான பாராளுமன்றம் அவசியமாகும். நாட்டின் சுயாதீனம், வெளிநாடுகளுக்கு அடிப்பணியாத பொறிமுறையொன்று அவசியமாகும். நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். மக்கள் வழங்கிய வாக்குறுதியின் எதிரொலிகள் சிறிகொத்தவின் உள்ளே மோதல்களாக மாறியுள்ளன என்றார்.


 போர்த்துகலுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞன் விமான நிலையத்தில் கைதுகுறைவான ஆவணங்களை சமர்பித்து இத்தாலி வழியாக போர்த்துகலுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 35 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் இன்று (14) அதிகாலை 3.10 அளவில் போர்த்துகல் வழியாக கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ ஆர் -663 விமானத்தில் போர்த்துகல்லுக்கு செல்லும் நோக்கில் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர் முதலில் இத்தாலியின் மல்பென்சா நகருக்கு விமானம் ஒன்று புறப்படுவதை அவதானித்து விமான நிலையத்தின் குடிவரவுத் துறைக்கு வந்துள்ளார்.

அங்கு அவர் வழங்கிய போர்த்துக்கல் விசா சர்வதேச தரத்திற்கு உட்பட்டதாக இருக்கவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Image result for அன்னம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
இன்று மாலை, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரச துறையினை நவீனமயப்படுத்துவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் உதவ தயாராக உள்ளதுடன், இராணுவ உறவுகளை வலுப்படுத்தல், புலனாய்வு பகிர்வினை மேற்கொள்ளல், இலங்கை பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதற்கும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரொன் மல்கவுக்கும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு அதன் விவசாயம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் அதேவேளை, எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் நாட்டில் வளர்ந்து வரும் இணைய பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு இஸ்ரேலிய அரசு அதன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் இதன்போது கூறினார்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவ ராமஸாமி அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து....

தேசிய சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென்ற தார்மீக உரிமைகளின்படி விடுத்த பலதரப்பு வேண்டுகோள்களையடுத்து இறுதி நேரத்திலாவது அப்படி நடக்கும் என்று காத்திருந்து நடக்காதபடியால் இந்த பதிவை மனம் கனக்க எழுதுகிறேன்.

நாட்டில் ஒரு மொழியில் தேசிய கீதம் இருந்தால் பரவாயில்லை என்று மனதை தேற்றலாம் என்றாலும் தமிழ் மொழியில் பாடுவது ஏதோ பெருந்தவறு என்பது போல சித்தரிக்கப்படுவதை ஜீரணிக்க முடியவில்லை.

சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்த போதும் பிரதான சிங்கள கட்சிகளின் தலைவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. அதில் புதினமும் இல்லை.

இதை வாசிக்கவும் 👇

“ 1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்தனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூரே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கியக் காரணமான அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும்.”



தமிழர் இந்த நாட்டில் சிங்களம் தமிழ் என்று பாராது செயற்பட்ட வரலாற்றின் ஒரு துளி அது...

இப்போது தமிழில் தேசிய கீதம் பாட மறுக்கப்பட்டுள்ளது.

தமிழைப் போன்று சிங்கள தேசிய கீதம் எனக்கு மனப்பாடம். அது இசைக்கப்படும்போது ஒரு இலங்கையனாக உச்சரிப்பது எனது வழக்கம்.

ஆனால் இன்று முதல் அப்படி உச்சரிப்பது தேவைதானா என்று யோசிக்கிறேன். ஒரு மொழியில் தேசிய கீதம் இருந்தால் பரவாயில்லை என்பதற்கும் தமிழ் மொழியில் இருக்கக் கூடாது என்பதற்கும் இந்த நாடு காட்டும் வித்தியாசத்தை உணர்கிறேன்.

ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் எனது நண்பர்கள் அரசியல் தலைவர்களாக இருந்தாலும் எனது நிலைப்பாட்டை முன்வைப்பதில் நான் இருதடவை யோசிக்க விரும்பவில்லை.

அவர்களுக்கு அவர்கள் மொழி உயிர் என்றால் எனக்கு என் மொழி சுவாசம்...

தமிழில் தேசிய கீதம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்ற நிலை மாறி இப்போது தமிழில் தேசிய கீதம் கட்டாயம் தேவையே என்ற மனநிலை உருவாகியுள்ளது.

ஒரு தமிழனாக.. ஊடகனாக இதை பதிவு செய்ய விரும்புகிறேன்..

காலம் பதில் சொல்லட்டும்..!

சீனர்களை கண்டு அச்சமடைய வேண்டாம், மிருக கொலையை நிறுத்த அந்நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கை.

ரத்தனதேரர் அந் நாட்டு மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் எனவும் வைரஸ்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் விரைவில் நலமடைய பிராத்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை ,மிருக கொலையை நிறுத்துவதற்கான சட்டமொன்றை கொண்டுவருமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.

இராஜகிரியவில் உள்ள சதஹம் செவனவில் இன்று -31- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் , இதன் தாக்கம் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலாக அனைத்து வித நடவடிக்கைகளையும் , சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் அநாவசியமாக பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஆகவே ,கொடுக்கப்படும் உண்மை தகவல்களுக்கு அமைய செயற்படுவதன் ஊடாக இந்த நோய் நிலைமையை உரிய வகையில் எதிர்கொள்ளகூடியதாகவிருக்கும்.

அத்துடன், இந்த வைரசின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீன மக்களையிட்டு கவலையடைகின்றோம்.

கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களை தெளிவு படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

 கொரோனா வைரஸ் வெறுமனே நோய் தாக்கத்திற்கு உள்ளானவருடைய வியர்வை எச்சில் பட்டால் பரவும் என்று நினைப்பது தவறான விடயமாகும்.

இந்த வைரஸ் எமது வாய் மற்றும் மூக்கின் ஊடாக உடலினுள் பிரவேசிக்கும் போது மாத்திரமே இந்த நோயின் தாக்கம் ஏற்படுகின்றது.

ஆகவே தான் முக மூடிகளை பாவிப்பது சிறந்தது என கூறப்படுகின்றது.
அதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி எம்மிடத்தில் காணப்படும் பட்சத்தில் இந்த வைரசின் தாக்கம் ஏற்படாது.

இந்த வைரசின் தாக்கம் ஏற்படும் அனைவருமே உயிரிழப்பதில்லை. சிறுவர்கள் இந்தவைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலைமை மிக குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

இது வரையில் சீனாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறெனின் நோயெதிர்ப்பு சக்கதி குறைந்த மட்டத்தில் இருப்போரையே வைரஸ் அதிக அளவில் தாக்குகின்றது என அவர் தெரிவித்தார்.
(ஆர்.விதுஷா)

மல்லாகத்தில் நேற்று பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 பேர் கொண்ட குழு ஒன்றினால் மல்லாகத்தில் வைத்து கடத்தப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி, பின்னர் வரணி பகுதியில் கடத்தப்பட்ட வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்பட்டதாகவும், இதற்காக குறித்த மாணவிக்கு போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை வழங்க முயற்சித்த போதும், அவர் அதனை தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடத்தல்காரர்களை எதிர்த்து குறித்த மாணவி நீண்டநேரம் போராடிய நிலையில், வரணி பகுதியில் வைத்து வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் யாரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

குறித்த மாணவி சிறு காயங்களுக்கு ஆளான போதும், குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எவையும் நேரவில்லை என்று காவற்துறையினரும், வைத்தியத் தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget