Articles by "Politics"

நாங்கள் இனவாதிகளோ!, பிரதேசவாதிகளோ!, பயங்கரவாதிகளோ! அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால் பறித்தெடுக்கப்பட்ட நாம் இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமைப்பட்டவர்களே என பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய உப தலைவரும், முதலைப்பாளி வட்டார அமைப்பாளருமான தௌபீக் அவர்களின் ஏற்பாட்டில் தராசு சின்னத்தில் இலக்கம் 7ல் போட்டியிடும் ஆப்தீன் எஹியா அவர்களை ஆதரித்து நேற்று (09) முதலைப்பாளியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

30 வருடங்களாக நாம் பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்களித்தோம். ஆனால் புத்தளம் தொகுதிக்கான சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படுவதில்லை. எமது விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் தொகுதிக்கு வெளியிலுள்ள பெரும்பான்மையினரே பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். எமது விருப்பு வாக்குகளால் தெரிவானவர்கள் எமது உரிமைகளையும், அபிலாசைகளையும் பறித்தெடுப்பதிலும்,ஆக்கிரமிப்புக்களை செய்வதிலும், எமது பிராந்தியத்தில் குடியேற்றுவதிலுமே ஈடுபாடு காட்டினர்.
தற்போது எம்மிடம் எஞ்சியுள்ளது விவசாய நிலங்கள் மாத்திரமே. அனைத்து நிலங்களையும் (உப்புளக் காணிகள், அரச காணிகள், கடல் நிலங்கள்) பறித்து எமது மக்களுக்கானதைப் பறித்து சில தொழிலதிபர்களுடன் இணைந்து பங்கிட்டு இலாபம் அடைந்து கொண்டனர்.


22 ஆண்டுகள் புத்தளம் மாவட்டத்திற்கான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதிலேயே எமது அரசியலை ஆரம்பம் செய்து வெற்றி பெறாவிட்டாலும் தேசிய பட்டியல் மூலம் நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அதிகாரம் கிடைத்தது. அதனை துஷ்பிரயோகம் செய்தனர். எமது இனத்துக்காக இழந்த பாராளுமன்ற உறுப்புரிமையை வென்றெடுக்க எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களை முகம்கொடுக்க அவர்களால் முடியாமல் போனது. எவ்வித திட்டங்களும் அவர்களிடம்; இல்லை. இழந்த பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற கோசங்களை மாத்திரமே கைவசம் வைத்திருந்தனர்.

தற்போதும் அதே கோசங்களுடன் எம்மிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் எமது பிரச்சினைகளுக்கான எவ்விதமான தீர்வும் இல்லை. எமது பிரச்சினைகள் என்வென்பது குறித்த தெளிவு கூட அவர்களிடம் இருக்குமா என எண்ணத் தோன்றுகின்றது.

நாம் எமது மக்களின் பிரச்சினைகளை மக்களுடன் இருந்து இணங்கண்டுள்ளோம். பொலிஸிலும், பிரதேச செயலகங்களிலும், எமது நிலை என்னவென்பது குறித்து நான் கூறி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எமது மக்களை அவர்கள் வழிநடத்துக்கின்ற விதம் என்னவென்பது பற்றி நாங்கள் தினந்தினம் காண்கிறோம். பிரதேச செயலகங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும், என பல கிலோ மீற்றர்கள் எமது மக்கள் பிரயாணிக்க வேண்டிய நிலையே இன்றுள்ளது. எமது வாழ்வாதாரத்தை பிரயாணத்துக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எமது மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுத் திட்டங்களுடனேயே நாம் தேர்தல் களத்தில் வாக்குக் கேட்கின்றோம் எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களாக ஆஸிக், அக்மல், றிபாஸ் நஸீர், பௌஸான், முன்னால் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஷாபி, முதலைப்பாளி பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் மக்கீன், செயலாளர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஊடகப் பிரிவு)



கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சிற்கு வாக்களித்து எம்மால் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனது, நீண்ட காலமாக புத்தளம் மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கிய சிறுபான்மை கட்சிகள் இன்று வரை முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை பெற எட்டிய முயற்சிகள் எதுவுமில்லை,

ஆனால் மிக குறுகிய காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு அதாவது கடந்த பொதுத்தேர்தலில் முதல்தடவையாக களமிறங்கி சொட்ப  வாக்குகளால் தோல்வியுற்ற போதிலும் கட்சியின் செயலாளரை இழந்து ,இன்று வரை வழக்கு பேசிக்கொண்டிருக்கின்றார், அதே நேரம்  மன்னார் மாவட்ட பொதுஜன பெரமுனாவின் அமைப்பாளராக அண்மையில் பதவிபெற்று உங்களுக்கெதிராக எஹியா பாய் செயற்படுகிறார். இவர்களை எதிர்த்து புத்தளம் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியலை தந்து கௌரவ படுத்தியுள்ளீர்கள்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு , தற்போதைய நகர சபை தலைவர் பாயிஸ் அவர்களின் பிரதேச வாத கருத்துக்களால் ,துரோகத்தனத்தால் மக்கள் பிழையாக வழிநடத்த பட்டதே உண்மை, எனினும் இதய சுத்தியுடன் நீங்கள் புத்தளம் மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதியை வென்றெடுக்க ஆய்வுகளை மேற்கொண்டு தனித்து களமிறங்கினால் மாத்திரமே வெற்றியடைய முடியும் என்ற முடிவில் உங்கள் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ,பிராந்திய அமைப்பாளர்கள் மூலம் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ,சுதந்திர கட்சி  புத்தளம் தொகுதி உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்களுடன் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடாத்தினீர்கள்.

புத்தளம் மாவட்ட மக்களுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுத்தருவதற்காக சுமார் இரண்டரை வருடங்கள் கஷ்ட்டப்பட்டீர்கள் , உங்களின் தியாகங்களை புத்தளம் மக்கள் நாம் உணர்ந்துள்ளோம்.

இதுவரை எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாது இருந்து விட்டு புத்தளம் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் மொட்டுடன் சங்கமிக்க ஆளுநர் முஸாமில் அவர்களுடனும் ,பசில் ராஜபக்ஷ உடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ,பேச்சுவார்த்தை சரிவராத பட்சத்தில் வழியில்லாமல் மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையிடம் மண்டியிட்டுள்ள துரோகத்தனத்தை மக்கள் மறக்கவில்லை.அதே நேரம் கட்சியின் போராளிகளும் மறக்கவில்லை.
அதே நேரம் ஏற்று மீண்டும் மொட்டுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் அக்கட்சியின் முன்னால் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் யானையுடன் சங்கமிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றார். இவ்வாறு ஸ்த்தீரம் இல்லாத நிலையில் , யார் வேண்டுமானாலும் எமது சின்னத்தில் போட்டியிடலாம் என முஸ்லீம் காங்கிரஸ்  கட்சியின் தலைமை விடுத்துள்ள அறிக்கையானது அந்த தலைமைத்துவத்தின் பண்புகைளை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதாய் அடையாளப்படுத்துகின்றது.

எனவே புத்தளம் மாவட்ட மக்கள் உங்களின் இதய சுத்தியுடனான செயற்பாட்டை வரவேற்கின்றோம். நீங்கள் உங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதோடு , தயவு செய்து உங்களின் முயற்சிகளில் பின்நிற்க வேண்டுமெனவும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இதற்கு முஸ்லீம் காங்கிரசின் போராளிகளும் ஆதரவு வழங்கும் மனப்பான்மையுடன் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டுவதுடன், மயில் சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வேண்டுகோள் விடுகின்றோம். என அவர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(புத்தளம் மாவட்ட சிவில் சமூக அமைப்பு)

சஜித் தலைமையிலான "ஐக்கிய மக்கள் சக்தி" எனும் அரசியல் கூட்டணியில் இணையும் முடிவை தழிழ் முற்போக்கு கூட்டணி இன்று (26) அதிகார பூர்வமாக அறிவித்தத

இதற்காக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச உட்பட பல முக்கியஷ்தர்கள் கலந்துகொண்டனர்.


வரப்போகின்ற ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக தங்கள்  கட்சி திகழும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த கருத்தினை குறிப்பிட்டார்.

தங்கள் கட்சி சஜித் தலைமையிலான பாரிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சின்னம் தொடர்பான சிறு சிக்கல் இருப்பதாகவும் யானையா அன்னமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக  அவர் குறிப்பிட்டார்.

மனோ கனேசன் , திகாம்பரம் , ரவுப் ஹக்கீம் ஆகியோர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்க பேசி எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் அததெரணவுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து கலந்துரையாடுவது இந்த சந்திப்பின் நோக்கம் என ஆஐணக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அன்றைய தினமே தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் அன்றைய தினம் காலை 9.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரென பிரதமர் நம்பிக்கை
பாராளுமன்றத்தை மார்ச் மாதம் கலைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிடுவாரெனத் தானும்,ஏனைய அமைச்சர்களும் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
பதுளை எட்டாம்பிட்டிய – வெல்லவெல நீர் விநியோகத் திட்டத்தை நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்: பன்னிரெண்டு கிராமங்களைச் சேர்ந்த 15ஆயிரம்பேர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
எம்மால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமில்லை.
கடந்த அரசாங்கம் பெரும் கடன்சுமையை ஏற்படுத்திச் சென்றுள்ளது.இச்சுமையை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.பாராளுமன்றம் நாளை (இன்று) கூடும்போது விஷேட சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இச் சட்டமூலத்தை எதிர்க்கட்சி நினைத்தால் தோற்கடிக்கலாம்.
இவ்வாறு தோற்கடிக்கப் பட்டால் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.இதைத் தவிர வேறு வழி எமக்கு இல்லை. பொதுத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அமைக்கப்படும் அரசு மக்களின் அரசாகவே இருக்கும்.கடந்த அரசைப் போன்று நித்திரை கொள்ளும் அரசாகவோ, வேலைத் திட்டங்களை மேற்கொள்ளாத அரசாகவோ, பேச்சளவில் மட்டும் செயற்படும் அரசாகவோ இருக்காது.அரசியல் பழிவாங்கல்களும் எமது நோக்கமில்லை. எமக்கு எதிராகக் கடந்த அரசாங்கம் எத்தனையோ குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியது.
எனினும் எதையுமே அவர்களால் நிரூபிக்க முடியாமற்போனது.கடந்த அரசின் மத்திய வங்கி பிணைமுறிக் கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஒன்றினைந்து அமைத்துள்ள கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், தேசிய தவிசாளராக மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பொது செயலாளராக பெஸீல் ராஜபக்ஷ அவர்களும் சற்று முன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

30 வருடம் பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கும் புத்தளம் தொகுதி தொடர்ந்தேச்சியாக பெரும்பான்மை கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து,  தன் இறுப்புக்கான இறுதி போராட்டம் என சில கல்விமான்கள் கூறுமளவு முக்கியமான தேர்தலாக 2020 பொதுத்தேர்தல் அமைந்துள்ளது.

இந்த நிலையையில் கூட்டணியை அமைப்பதற்காக முன்னின்ற முன்னால் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான நியாஸ் அவர்கள், தற்போது கூட்டணியை விட்டு யானையில் பயணிப்பது தொடர்பாக பேசுவதாகவும்,  கட்சியின் தலைவரின் தலைமையில் புத்தளம் மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள் கூடிய சந்தர்ப்பத்தில் அவர் கூட்டணியில் உள்ளவர்கள் வென்று பெசில் ராஜபக்ஷவுடன் இணைந்து விடுவார்கள் என்ற கருத்தையும் கூறி இருந்ததுடன், தங்களின் ஆதரவாளர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அவர் யானையுடன் பயணிப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாகவும், அவர்களின் விருப்பை கேட்டறிந்ததாகவும்,  முஸ்லிம்காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பெரும்பான்மை கட்சிக்கு வாக்களித்து தெளிவான நிலையில் மக்கள் கூட்டணியை வரவேற்கும் சந்தர்ப்பத்தில் எதற்காக நியாஸ் மாற்றமாக நடக்கிறார் என்ற வினா கடந்த காலங்களில் ரங்கே பண்டார பா.உறுப்பினருக்கு வேலை செய்ததாகவும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பலமிழக்க செய்ததாகவும், பல தரப்பட்ட சர்ச்சைக்குறிய குற்றச்சாட்டுக்களை அவர் சுமந்துள்ள நிலையில் தெளிவான விளக்கத்தை நாம் வினவிய போது, இன்னும் உறுதியான நிலைப்பாடு இல்லையென்றும் உறுதியான தீர்மானத்தின் பின் விளக்கமளிப்பதாகவும் அவர்  புத்தளம்மிரருக்கு தெரிவித்தார்.


Image result for அன்னம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
இன்று மாலை, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதன் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினர் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (14) பிற்பகல் 02.30 க்கு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (14) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

´சமகி ஜனபல வேகய´ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இந்த கலந்துரையாடலின் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், இன்றைய தினம் இறுதி கலந்துரையாடல் ஒன்று ரணில் தரப்பினரில் 5 உறுப்பினர்கள் மற்றும் சஜித் தரப்பினரில் 5 உறுப்பினர்களின் பங்கேற்பில் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், மிக விரைவில் மக்களை அணுக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று 12)    கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில்
நடைபெற்றது.

இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் பாயிஸ், உயர்பீட உறுப்பினர்களான நியாஸ்,பைரூஸ்,ஜெவ்பர் மரிக்கார் உட்பட பலர்ர் கலந்துகொண்டனர்.


சஜித் கூட்டணியோடு பயணிக்க முன்னால் மாகாண சபை உறுப்பினர் கருத்து வெளியிட்ட போதும் சமூகத்திற்காக கூட்டணியோடு ஒன்று பட்டு போக வேண்டும் என கலந்து கொண்ட அக்கரைப்பற்று ஒன்றியம் மற்றும் முக்கியஷ்தர்கள்  ஆலோசனை கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன் போது கூட்டணியோடு அல்லது தனியாக பயணிப்பெதென்றும்,பெரும்பான்மை கட்சியில் பயணிப்பதில்லை என்ற நிலைப்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய கூட்டணியை கட்சியாகப் பதிவு செய்யும் விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்திருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (11)அறிவித்துள்ளார்.  
புதிய கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் போது National Power என வருவதால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாதகமானதாக அமையும் என அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டி புதிய கட்சியைப் பதிவு செய்ய வேண்டாமெனக் கோரி கடிதம் எழுதியுள்ள நிலையில் அதனைப் பரிசீலித்த ஆணைக்குழுத் தலைவர் புதிய கட்சியின் ஆங்கில வாசகத்தில் தேசிய என்ற சொல்லை நீக்கி சமாதான மக்கள் சக்தி என வரும் விதத்தில் ‘சமகி ஜனபலய’ என்று கருத்துப்பட பயன்படுத்துமாறும் புதிய கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் திருத்தியமைக்கப்பட்ட பெயரின் கீழ் அக்கட்சியைப் பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.  


நேற்று அபாண்டம் சுமத்திய, விமலுக்கு எதிராக 100மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் சற்றுமுன் ஊடக சந்திப்பில் அறிவிப்பு செய்தார்.

”காணி உறுதிகளோ அல்லது வேறு எந்த மோசடிகளோ நான் செய்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு நான் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நான் சவால் விடுக்க விரும்புகிறேன். தேர்தல் காலங்களில் இப்படியான குற்றச்சாட்டுக்களை விடுப்பது வாடிக்கையாகி விட்டது.நான் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதற்கு ஆதாரத்தை காட்டி நிரூபிக்காமல் வெறுமனே எழுந்தமானமாக கூறக் கூடாது.ஸஹ்ரான் சதொச வாகனங்களை பாவித்தார் என்று முன்னர் கூறினார்.அதற்கு என்னாயிற்று? சிங்கள மக்களை தவறான வழியில் நடத்தி அரசியல் ஆதாயம் தேட அவர் முயல்கிறார். எனது அமைச்சு வாகனங்களை ஸஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியிருந்தால் அதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே ? எனக்கு அமெரிக்காவிலோ அல்லது எந்தவொரு நாட்டிலோ வங்கி கணக்கு கிடையாது. காணி உறுதிகள் என்னிடம் இருப்பதாக சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய்.அப்படியான காணிகள் இருந்தால் அவற்றை அரச உடைமைகளாக்குமாறு நான் ஏற்கனவே பல தடவை கூறியிருக்கிறேன்.சதொசவில் நான் மோசடி செய்ததாக கூறப்பட்டது.நான் அமைச்சு கேள்விமனு விடயங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை. எனவே என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் நிராகரிக்கிறேன்.நான் என் நற்பெயரை களங்கப்படுத்தியமைக்காக அவர் மீது 100 கோடி ரூபா மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய சட்டத்தரணி மூலம் அறிவித்துள்ளேன்.அவர் அதற்கு இரு வாரத்திற்குள் பதில் தராவிட்டால் வழக்கு தொடுக்கப்படும்.

குற்றச்சாட்டை அவர் சுமத்துவதால் – அவரது ஆட்சி இருப்பதால் இவை உண்மையாக இருந்தால் நிரூபிக்க வேண்டும்.சி ஐ டி தனது வேலையை செய்யவேண்டும்.விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகளை வைத்து சி ஐ டி செயற்படக் கூடாது.வில்பத்து காடுகளை நான் அழிப்பதாக கூறினார்கள்.அதனை விசாரிக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.ஈஸ்ரர் தின தாக்குதல் குறித்தும் விசாரணை செய்யுமாறு நான் ஜனாதிபதியிடம் கோரினேன்.தவறு செய்தால் இப்படி கோருவோமா? ”

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அவர் ,அடுத்த தேர்தலில் 10 பேர் வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியில் வெல்வார்களென குறிப்பிட்டார்.

திர்வரும் பொது தேர்தலில் சஜித் தலைமையிலான ஒரு கூட்டணி தேர்தலில் கட்சியாக போட்டியிடுவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல்கள் ஆணையகத்தில் சமர்ப்பித்துள்ளது.

அதன் படி சஜித் தலைமையிலான புதிய கூட்டணி "தேசிய அமைதி கூட்டணி " என பெயரிடப்பட்டுள்ளது. அதன் சின்னமாக இதயமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதிய கூட்டணியின் பொது செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


(ஊடகப்பிரிவு)

புத்தளம் தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சுய இலாபங்களுக்காக சிலர் இல்லாமலாக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் கொந்தராத்து முகவர்களாவர். அதே நேரம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் எமது தலைமையோடு சேர்ந்து குரலெழுப்ப கூட ஒருவராக நான் இருப்பேன்.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட போராளிகளுடனான சந்திப்பு (08) இடம் பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம் தொகுதி  மக்கள்  முப்பது வருடம் கண்ட அனுபவத்தினை கொண்டு, தற்போது சிறுபான்மை கட்சிகளின் கூட்டணியால் மாத்திரம் தான் வெற்றிபெற முடியும் என்ற மன நிலையிலுள்ளனர்.

30 வருட அனுபவத்தை கொண்டு நாம் நடத்திய ஆய்வில் தெளிவாக புலப்பட்ட உண்மையும் அதுவே, தனியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோ,அல்லது கூட்டணி மூலமோ நாம் வெறுமனே 25 ஆயிரத்திலிருந்து 27 ஆயிரத்திற்கு இடைப்பட்ட வாக்குகளை பெறும் போது ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவது என்பது மிக இலகுவானது.

நானோ வேறு கூட்டணியில் போட்டியிடும் வேறு யாராக இருந்தாலும் தங்களுக்கான வாக்குகளை பெற ஓடும் போது, கட்சியின் வாக்குகள் எழுச்சி பெறும்,யார் அதிக வாக்கினை பெறுகின்றாறோ அவர் வெற்றி பெற்றவராவார். இதுவே நிதர்சனமாகும் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

இந்த நிதர்சனத்தை மக்களும் அறிந்துள்ளனர். அதனை குழப்பியடியடிக்க பெரும்பான்மை கட்சி  முகவர்கள் கலமிறங்கியுள்ளனர். இவர்களின் சதியை இறைவனின் துணையோடு நாம் முறியடிப்போம். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி அமானிதமானது, இன்று எமது சமூகம் பல தரப்பட்ட சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இதற்கெதிராக போராடக்கூடிய தகுதியானவர்களாக பதவியில் அமருபர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், தனது கரங்களை தூய்மையாக வைத்துகொள்ள முடிந்தென பெருமிதம் கொள்ளும் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபாநாயகர் பதவிக்கு விடைகொடுக்க தயாரெனவும் தெரிவித்துள்ளார். 
தான் சபாநாயகராக பதவி வகித்த காலத்தில் தனக்கு ஆலோசனைகளை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் ராமக்ஞ பீடத்துக்கு சென்றிருந்தபோதே அவர் மேற்படி விடயங்களை கூறியுள்ளார். 
அரசியலை சாராமல் தேசத்துக்கான பணியாற்றிய தலைவெர சபாநாயகர் கரு ஜயசூரியவை கருதுவதாக தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள்,  அவருக்கு ஆசியும் வழங்கினர். 
அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் சபாநாயகராக இருந்த காலப்பகுதியில் புதிய வாகனங்களை தனக்காக கொள்வனவு செய்யவில்லை என்றும்,  முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ பாவனை செய்த வாகனங்களையே உபயோகித்ததாகவும் தெரிவித்தார். 

ஐ.தே.முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க பிரத்தியேக சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

ஐ.தே.முன்னணியின் பங்காளிகளின் கூட்டங்களில் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதனாலேயே இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையின் 2020 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (31) கல்லூரி மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.




“புத்தாக்கமே வெற்றி” எனும் தொனிப் பொருளில் இம்முறை போட்டிகள் நடைபெற்றன.


அதிபர் H. அப்துல் ஜப்பார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில்  அதிதிகளாக நகர் அரசியல் பிரபலங்கள் பங்கு கொண்டதுடன் , ஓட்டப்போட்டியிலும் பங்குகொண்டனர்.

இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் அதிகூடிய  புள்ளிகளைப் பெற்று கமால் இல்லம் முதலாம் இடத்தையும், ஜின்னா, தாரிக், இக்பால் என்பன முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களையும் பெற்றுக் கொண்டன.

சீனர்களை கண்டு அச்சமடைய வேண்டாம், மிருக கொலையை நிறுத்த அந்நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கை.

ரத்தனதேரர் அந் நாட்டு மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் எனவும் வைரஸ்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் விரைவில் நலமடைய பிராத்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை ,மிருக கொலையை நிறுத்துவதற்கான சட்டமொன்றை கொண்டுவருமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.

இராஜகிரியவில் உள்ள சதஹம் செவனவில் இன்று -31- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் , இதன் தாக்கம் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலாக அனைத்து வித நடவடிக்கைகளையும் , சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் அநாவசியமாக பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஆகவே ,கொடுக்கப்படும் உண்மை தகவல்களுக்கு அமைய செயற்படுவதன் ஊடாக இந்த நோய் நிலைமையை உரிய வகையில் எதிர்கொள்ளகூடியதாகவிருக்கும்.

அத்துடன், இந்த வைரசின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீன மக்களையிட்டு கவலையடைகின்றோம்.

கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களை தெளிவு படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

 கொரோனா வைரஸ் வெறுமனே நோய் தாக்கத்திற்கு உள்ளானவருடைய வியர்வை எச்சில் பட்டால் பரவும் என்று நினைப்பது தவறான விடயமாகும்.

இந்த வைரஸ் எமது வாய் மற்றும் மூக்கின் ஊடாக உடலினுள் பிரவேசிக்கும் போது மாத்திரமே இந்த நோயின் தாக்கம் ஏற்படுகின்றது.

ஆகவே தான் முக மூடிகளை பாவிப்பது சிறந்தது என கூறப்படுகின்றது.
அதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி எம்மிடத்தில் காணப்படும் பட்சத்தில் இந்த வைரசின் தாக்கம் ஏற்படாது.

இந்த வைரசின் தாக்கம் ஏற்படும் அனைவருமே உயிரிழப்பதில்லை. சிறுவர்கள் இந்தவைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலைமை மிக குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

இது வரையில் சீனாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறெனின் நோயெதிர்ப்பு சக்கதி குறைந்த மட்டத்தில் இருப்போரையே வைரஸ் அதிக அளவில் தாக்குகின்றது என அவர் தெரிவித்தார்.
(ஆர்.விதுஷா)





ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது.

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை, எனினும் 70 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை தனதாக்கியது.

ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள் 9 பிரிவுகளாக நடைபெறுகின்றன.

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget