இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 2020 : நாடுபூராக 15 ஆம் திகதி !
இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பிரதேச செயலாளர் மட்டத்தில் இத் தேர்தல் நடைபெறும். 18 - 27 வயது வரையறைக்கு உட்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்தியவர்கள் இளைஞர் பாராளுமன்றத்துக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும்.
வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இளைஞர் யுவதியினர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவில் 3 வருட காலம் குடியுரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
வேட்பாளரின் தாய் அல்லது தந்தை அல்லது சகோதரர் பொது மக்கள் பிரதிநிதியாக செயற்படுவாராயின் அவ்வான ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது.

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.