கொழும்பின் ஷங்ரி லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்தாரிகள் இருவரின் தந்தையான மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (31) கொழும்பு மேலதிக நீதவான் சந்த்ரா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
தெமட்டகொடையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தினமான, ஏப்ரல் 21 ஆம் திகதி சகோதரர்களான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இல்ஹாம் ஷங்ரி லா ஹொட்டலிலும், மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இன்சாப் சின்னமன் கிராண்ட் ஹோட்டலிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களின் தந்தையே மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் என்பவராவார்

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.