தம்புத்தேகம, குடாபெல்லன்கடவல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படும் நிலையில், யானைகளை துரத்துவதற்கான நடவடிக்கை கடந்த 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீர்ர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு யானைகளை துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே, குறித்த அதிகாரி யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
புத்தளத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.