கொரோனா வைரஸைப் பற்றி பரவும் தவறான தகவல்களும், அது தொடர்பில் மக்களை
அதிகப்படியான அச்சத்திற்கு ஆளாக்கும் முயற்சிகளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தேவையற்ற பிரச்சாரங்களுக்கு இலங்கை பலியாகக் கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
அனைத்து இலங்கையர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப் படுகிறது.
"அனைத்து இலங்கை அதிகாரிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் முதன்மை முன்னுரிமையாக உறுதிப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தவறான தகவல் மற்றும் தேவையற்ற பீதி ஏற்கனவே உள்ள நடவடிக்கைகளை சிக்கலாக்குகிறது. பொதுமக்களுக்கு பீதியை உருவாக்க பரப்பப்படும் கொரோனா வைரஸின் தேவையற்ற போலி விபரங்களை இலங்கையர்கள் ஏற்றுக்கொள்ள தேவையில்லை என மேலும் தெரிவித்தார்.

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.